

டெல்லியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தின் மேற்கு மாவட்டத்தில் வெளிவட்டச் சாலை அருகே அமைந்துள்ள நாங்லோய் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
டெல்லியின் நாங்லோய் பகுதியில் அதிகாலை 5.02 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 2.3ஆகப். பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
இவ்வாறு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.