Last Updated : 23 Dec, 2020 05:41 PM

 

Published : 23 Dec 2020 05:41 PM
Last Updated : 23 Dec 2020 05:41 PM

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதக்குழு முகாம் தகர்ப்பு: 6 பேர் கைது

பிரதிநிதித்துவப் படம்.

காஷ்மீர்

காஷ்மீரில் இயங்கிவந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக்குழுவின் ரகசிய முகாம் ஒன்றை இன்று பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளனர். இதில் 6 தீவிரவாதிகள் கைது செய்யபபட்டுள்ளனர்.

அனந்த்நாக் மாவட்டத்தின் டிரால் மற்றும் சங்கம் பகுதியில் கையெறி குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்ததாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அவந்திபோரா போலீஸார், 42 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் மற்றும் 180 பி.என் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஆறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடையவர்கள்.

கைது செய்யப்பட்ட 6 பேரும் இஜாஸ் அஹ்மத் பட், மொஹமட் அமீன் கான், உமர் ஜபார் தார், சுஹைல் அகமது பட், சமீர் அகமது லோன் மற்றும் ரபீக் அஹ்மத் கான் என அடையாளங் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆபத்தான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தான் கையாளும் நபர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் என்பதும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசி தாக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் டிரால் பகுதியில் அண்மையில் நடந்த தேர்தலை புறக்கணிப்பதாக அச்சுறுத்திய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மீது டிரால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x