Published : 23 Dec 2020 07:59 AM
Last Updated : 23 Dec 2020 07:59 AM

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை, மாசு, மண் தரம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட சவால்கள் உள்ளன: பிரதமர் மோடி

இந்திய திறமையில் முதலீடு செய்து இந்தியாவில் புதுமை படைக்க உலக சமுதாயத்தினர் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் புதுமையில் இந்தியா வளமான பாரம்பரியத்தை கொண்டுள்ளது என பிரதமர் கூறினார். நமது விஞ்ஞானிகள், சாதனை ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். உலகளாவிய பிரச்னைகளை தீர்ப்பதில், நமது தொழில்நுட்ப துறை முன்னணியில் உள்ளது. ஆனால், இந்தியா அதிகம் செய்ய விரும்புகிறது. நாம் கடந்த காலத்தை பெருமையுடனும், ஆனால் எதிர்கலாம் இன்னும் சிறந்ததாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம் என நரேந்திர மோடி கூறினார்.

அறிவியல்பூர்வமான கற்றலுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய மையமாக இந்தியாவை மாற்றுவதாகவே நமது அனைத்து முயற்சிகளும் உள்ளன என பிரதமர் கூறினார். அதேநேரத்தில், நமது விஞ்ஞானிகள், தங்கள் அனுபவங்களை உலகின் மிகச் சிறந்த திறமையானவர்களுடன் பகிர்ந்து கொண்டு வளர வேண்டும். இதை அடைய நாம் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்று, இந்திய விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பளிக்கும் ஹேக்கத்தான் போட்டி.

புதிய தேசிய கல்வி கொள்கை, ஆரம்ப நிலையிலேயே அறிவியல் மனநிலையை வளர்க்க உதவும் என பிரதமர் உறுதிப்பட கூறினார். இப்போது கவனம் முதலீட்டிலிருந்து முடிவுக்கும், பாடப்புத்தகத்திலிருந்து ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டுக்கு மாறியுள்ளது. இந்த புதிய கல்வி கொள்கை, உயர்தர ஆசிரியர்கள் உருவாவதை ஊக்குவிக்கும். இந்த அணுகுமுறை, இளம் விஞ்ஞானிகளுக்கு உதவும். இதற்கு அடல் புதுமை திட்டம் மற்றும் அடல் டிங்கரிங் பரிசோதனை கூடங்கள் துணை புரிகின்றன என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தரமான ஆராய்ச்சியை, திறமையானவர்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்க பிரதமரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் விஞ்ஞானிகளுக்கு இந்த திட்டம் உதவுகிறது என பிரதமர் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டியன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். பற்றாக்குறை மற்றும் தாக்கத்தின் இடைவெளியை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறைக்கிறது என அவர் கூறினார். இது ஏழைகளை அரசுடன் இணைக்கிறது. டிஜிட்டல் முன்னேற்றங்களுடன், இந்தியா உலகளாவிய உயர் தொழில்நுட்ப சக்தியின் வளர்ச்சி மற்றும் புரட்சியின் மையமாக மாறி வருகிறது என பிரதமர் கூறினார்.

உலகத்தரத்திலான கல்வி, சுகாதாரம், இணைப்பு மற்றும் ஊரக தீர்வுகளுக்கு இன்றைய இந்தியாவிடம் தரவு, மக்கள் தொகை மற்றும் தேவை உள்ளது. அனைத்துக்கும் மேலாக, இவற்றை சமநிலைப்படுத்தவும், பாதுகாக்கவும் இந்தியாவில் ஜனநாயகம் உள்ளது. அதனால்தான் உலகம், இந்தியாவை நம்புகிறது என பிரதமர் கூறினார்.

தண்ணீர் பற்றாக்குறை, மாசு, மண் தரம், உணவு பாதுகாப்பு போன்ற பல சவால்கள் நமது நாட்டில் உள்ளன. இதற்கு நவீன அறிவியலில் தீர்வு உள்ளது என பிரதமர் கூறினார். நமது கடலில் நீர், எரிசக்தி, மற்றும் உணவு வளங்களை விரைவாக ஆய்வு செய்வதில் அறிவியலுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. இதற்காக இந்தியா ஆழ்கடல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது மற்றும் இதில் வெற்றியடைந்துள்ளது என அவர் கூறினார். அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளின் நன்மை, வர்த்தகம் மற்றும் வணிகத்திலும் ஒரு வழியைக் காட்டுகிறது என அவர் கூறினார்.

வானை தொடுவதற்கு மட்டும் அல்ல, ஆழமான விண்வெளியின் உச்சத்தை தொடவும், இளைஞர்கள் மற்றும் தனியார் துறையை ஊக்குவிக்க, விண்வெளித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பிரதமர் கூறினார். ஊக்கத் தொகையுடன் கூடிய புதிய உற்பத்தி திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிலும் கவனம் செலுத்துகிறது என அவர் கூறினார். இதுபோன்ற நடவடிக்கைகள், விஞ்ஞானிகளையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சூழலையும் ஊக்குவிக்கும். இது புதுமைக்கு அதிக வளங்களை உருவாக்கவும், அறிவியல் மற்றும் தொழில்துறை இடையே புதிய கூட்டு கலாச்சாரத்தை ஏற்படுத்தவும் வழிவகுக்கும். அறிவியல் மற்றும் தொழில்துறை இடையே ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு உணர்வுக்கு புதிய கோணங்களை இந்திய அறிவியல் திருவிழா வழங்கும் என பிரதமர் கூறினார்.

தற்போது அறிவியல் சந்திக்கும் மிகப் பெரிய சவால், கொவிட் தொற்று நோய்க்கான தடுப்பூசியாக இருக்கலாம். ஆனால், அறிவியல் சந்திக்கும் நீண்டகால சவால், உயர்தர இளைஞர்களை கவர்வதும் மற்றும் அவர்களை தக்கவைப்பதும்தான். நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியலை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இன்று அறிவியல் என அழைக்கப்படுவது, நாளை தொழில்நுட்பம் ஆகிறது. அதன்பின்பு பொறியில் தீர்வாக மாறுகிறது. அறிவியல் துறைக்கு திறமையானவர்களை ஈர்க்க, அரசு பல கல்வி உதவித் தொகைகளை வழங்குகிறது. ஆனால் இதற்கு அறிவியல் துறையிடமிருந்து மிகப் பெரிய சேவை தேவை. சந்திராயன் திட்டத்தை சுற்றியிருந்து உற்சாகம், இளைஞர்கள் இடையே ஆர்வத்தை வெளிப்படுத்தும், சிறந்த தொடக்க புள்ளியாக இருந்தது.

இந்திய திறமையில் முதலீடு செய்து இந்தியாவில் புதுமை படைக்க, உலக சமுதாயத்தினருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் திறமையானவர்கள் உள்ளனர், வெளிப்படைத்தன்மை உள்ளது என பிரதமர் கூறினார். எந்த சவால்களை தீர்க்கவும், ஆராய்ச்சி சூழலை மேம்படுத்தவும் இந்திய அரசு தயாராக இருக்கிறது. ஒருவருக்குள் இருக்கும் சிறந்ததை அறிவியல் வெளிக் கொண்டு வருகிறது மற்றும் வேறுபாட்டின் சக்தியை பயன்படுத்துகிறது என அவர் கூறினார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவை சிறந்த நிலையில் வைத்ததற்காக நமது விஞ்ஞானிகளை அவர் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x