

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்றுடன் 27-வது நாளினை எட்டியுள்ளது. விவசாய சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இதனிடையே, தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாய அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துடெல்லி, உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2 விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தைநடத்தினர்.
அப்போது, புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்கு பெரிதும் பங்காற்றும் என்றும், அவற்றில் எந்த திருத்தமும் செய்யக்கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்கூறுகையில், “புதிய வேளாண் சட்டங்களில் இருக்கும் நன்மைகளை புரிந்துகொண்டு ஏராளமான விவசாய சங்கங்கள் அவற்றுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதேபோன்று, தற்போதுபோராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களும் இதனை புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்.அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாய அமைப்புகள் விரைவில் முன்வரும்” என்றார்.