Last Updated : 23 Oct, 2015 09:23 AM

 

Published : 23 Oct 2015 09:23 AM
Last Updated : 23 Oct 2015 09:23 AM

சிங்கப்பூரில் தயாரித்த 6 செயற்கை கோள்களை இஸ்ரோ ஏவுகிறது

சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட 6 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வரும் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவும் என்று அங்கிருந்து வெளியாகும் முன்னணி நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மைய ஏவு தளத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி29 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப் படும். இதில் கடல்சார் மற்றும் எல்லை பாதுகாப்பை கண்காணிப் பதற்கான 400 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளும் (TeLEOS-1) அடங்கும்.

டிசம்பர் 16-ல் ஏவப்பட உள்ள இந்த செயற்கைக்கோள்கள், தரைப்பரப்பிலிருந்து 550 கி.மீ. உயரத்தில் இருந்தபடி அடுத்த 5 ஆண்டுகளுக்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட குறு செயற்கைக்கோள் ஒன்று முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இஸ்ரோ விண்ணில் ஏவி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x