Last Updated : 22 Dec, 2020 12:37 PM

 

Published : 22 Dec 2020 12:37 PM
Last Updated : 22 Dec 2020 12:37 PM

15 ஆண்டுகளுக்குப்பின் சிபிஐ அமைப்பின் திருத்தப்பட்ட கையேடு வெளியீடு: சைபர் குற்றம், வெளிநாடுகளில் விசாரிப்பது குறித்து புதிய வழிமுறைகள் சேர்ப்பு


சிபிஐ அமைப்புக்கான கையேடு 15 ஆண்டுகளுக்குப்பின் திருத்தப்பட்டு , புதிய விதிமுறைகள், விசாரணை நெறிமுறைகள், வழிகாட்டி நெறிமுறைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த திருத்தப்பட்ட சிபிஐ கையேட்டை வெளியிட்டார். கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு திருத்தப்பட்டது, அதன்பின் 2020ம் ஆண்டில் பல்வேறு திருத்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சைபர் குற்றங்களை விாரிக்கும் முறைகள், எல்லை கடந்து சைபர் குற்றங்களை விசாரிக்கும் முறைகள், விரைவாக விசாரணையை முடிப்பது, ஆதாரங்களைச் சேகரித்தல், சர்வதேசஅளவில் விசாரணை, குற்றவாளிகளை பின்தொடர்தல் உள்ளிட்டபல்வேறு பிரிவுகளில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன்படி ஒரு வழக்கை விசாரிக்கும் கிளையின் உயர் அதிகாரி அந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும், மண்டல அளவில் பணிகளைக் கண்காணிக்கும் தலைமை அதிகாரி வழக்குகளை 9 மாதங்களில் முடிக்க வேண்டும். இதற்கு முன் ஓர் ஆண்டுவரை காலக்கெடு அளிக்கப்பட்ட நிலையில் அது 9 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிபிஐ கூடுதல்இயக்குநர் பிரவீன் சின்ஹா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுதான், குற்றப்பிரிவு கையேட்டில் மாற்றம், ஒரு வழக்கை விசாரிக்கும் அதிகாரி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் போன்றவற்றை வகுத்துள்ளது. கடைசியாக இந்த விதிமுறைகளில் 2005-ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் காலத்துக்கு ஏற்ப தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ சிபிஐ அமைப்பின் முன்னாள் மூத்த அதிகாரிகளுடனும், சட்டவல்லுநர்களுடனும், சிறப்புக்குழுவினர் ஆலோசித்து புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக மாறிவரும் குற்ற நிலப்பரப்பின் காரணிகள், ஆதாரங்களைச் சேகரித்தல், சர்வதேச விவகாரங்களைக் கையாளுதல், கிரிமினல் குற்றவாளிகளை பின்தொடர்தல் உள்ளிட்டவற்றில் புதிய அம்சங்கள் வழிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் விசாரணை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், இன்டர்போலுடன் இணைந்து விசாரணையை கொண்டு செல்லும் முறை போன்றவை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக டிஜிட்டல் உலகில் விசாரணையை துரிதமாகக் கொண்டு செல்வது, சைபர் குற்றங்களை விசாரிப்பது, அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சட்டங்களில் சமீபத்தில் செய்பட்ட மாற்றங்கள், விசாரணை நுட்பங்களில் மாற்றம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திருத்தத்தின் நோக்கமே வழக்குகள்விசாரணையை துரிதமாகவும், தரத்துடனும், உலகளாவிய வழிமுறைகளைப் பின்பற்றி முடிக்க வேண்டும் என்பதற்காத்தான். சமீபத்திய சட்டங்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், அதன் அறிவுரைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன “ எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x