Published : 22 Dec 2020 11:14 AM
Last Updated : 22 Dec 2020 11:14 AM

சர்வதேச பொருளாதார மையமாக மாறும்  ஒடிசா: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை

சர்வதேச பொருளாதார மையமாக மாறும் தகுதி ஒடிசாவுக்கு உள்ளது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ரூர்கேலா, சம்பல்பூர் மற்றும் ஜெருஸ்குடா கிளை ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.

சர்வதேச பொருளாதார செயல்பாடுகளில் மையமாக மாறும் வகையில் ஒடிசா அமைந்துள்ளது என்று அமைச்சர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

செழிப்பான கனிமவளங்கள், மக்கள்தொகை மற்றும் சந்தைகள் போன்ற காரணங்களால், சர்வதேச சந்தைகளில் எதிர்வரும் காலங்களில் வரவுள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் ஒடிசா உள்ளதாக பிரதான் கூறினார்.

கரோனா பெருந்தொற்றில் இருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாக கூறிய அமைச்சர், கொவிட்டுக்கு பிந்தைய காலத்துக்குள் நாடு நுழைந்துள்ளதாக கூறினார்.

கடந்த மூன்று மாதங்களில் அனைத்து பொருளாதார குறியீடுகளும் பொருளாதார மீட்சியை வலுவாக வெளிப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

மின்சார நுகர்வு, எரிபொருள் மற்றும் எரிவாயு நுகர்வு, சரக்கு மற்றும் சேவை வரி வசூல் போன்றவை பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை காட்டுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x