இட ஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் இல்லை: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தகவல்

இட ஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் இல்லை: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தகவல்
Updated on
1 min read

இப்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையை மாற்ற வேண்டும் என்ற கருத்தை பாஜக ஆதரிக்கவில்லை என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலை யில், இட ஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கடந்த மாதம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த கருத்துக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மாநில முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு ரத்து செய்து விடும் என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக அமித் ஷா பாட்னாவில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

இட ஒதுக்கீடு கொள்கையை மாற்ற வேண்டும் என்ற கருத்தை பாஜக ஆதரிக்கவில்லை. மாறாக, பாஜக ஆட்சிக்கு வந்தால் இப் போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

தலித், பழங்குடியினர், பிற்படுத் தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள உரிமை மீறப்படுவதை ஒருபோதும் பாஜக அனுமதிக்காது.

பிஹார் தேர்தலை பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கும் மேல்தட்டு வகுப்பினருக்கும் இடையிலான மோதலாக சித்தரிக்க லாலுவும், நிதிஷ் குமாரும் முயற்சிக்கின்றனர். ஆனால், ஒரு ஏழையின் மகனான மோடியை பாஜக பிரதமராக்கி உள்ளது என்பதை உணர வேண்டும்.

லாலு பிரசாத் அவரது மனைவி ரப்ரி தேவி, நிதிஷ் குமார் ஆகியோர் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செய்தபோதும் பிஹார் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

எனவே, மீண்டும் காட்டாட்சி வருவதை மக்கள் விரும்பவில்லை. பாஜக ஆட்சி வேண்டும் என்று விரும்புகிறார்கள். பாஜகவால் மட்டுமே இந்த மாநிலத்தை வளர்ச்சி பெறச் செய்ய முடியும். தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

மாநில அரசுகள் பொறுப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்ட தாக முஸ்லிம் ஒருவர் கொல்லப் பட்டார். இதுபோல் கர்நாடகா வில் எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார். இவ்விரு சம்பவங்களிலும் பாஜகவுக்கு தொடர்பு இல்லை.

மேலும் இவ்விரு மாநிலங்களி லும் முறையே சமாஜ்வாதியும் காங்கிரஸும்தான் ஆட்சியில் உள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சினை யில் மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in