

கர்நாடகாவில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் எனமுதல்வர் எடியூரப்பா அறிவித் துள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாக பரவியதால் 2020-21-ம்கல்வி ஆண்டிற்காக கடந்தஜூன் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. கர்நாடகாவில் கரோனா பரவல் சற்றுகுறைந்ததால் தகுந்த முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த நவம்பர் 18-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் எடியூரப்பா, கல்வி அமைச்சர் சுரேஷ்குமார், கல்வித்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் பெங்களூருவில் நேற்று முன்தினம்ஆலோசனை நடத்தினார். பின்னர் எடியூரப்பா செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
பள்ளிகளை திறப்பது குறித்து கடந்த 4 மாதங்களாக அரசு பள்ளிகளின் உரிமையாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினோம்.அனைத்து தரப்பிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தபோதும், நான் மட்டும் அனுமதி அளிக்காமல் இருந்தேன். தற்போது கர்நாடகாவில் கரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10-க்கும் கீழே குறைந்துள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதால் வைரஸ் பாதிப்பும் கணிசமாக குறைந்துள்ளது.
இதனிடையே, 10 மற்றும் 12-ம்வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு நெருங்கி வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனை ஏற்று மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். மற்ற நாட்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். பிற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி கள் திறக்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.