பிரதமர் கூறியதுபோல் 21 நாள் போரில் வெற்றி பெறவில்லை; திட்டமிடப்படாத ஊரடங்கு மில்லியன் கணக்கான உயிர்களை அழித்தது: ராகுல் காந்தி விமர்சனம்

ராகுல் காந்தி | கோப்புப் படம்.
ராகுல் காந்தி | கோப்புப் படம்.
Updated on
1 min read

பிரதமர் கூறியதுபோல் 21 நாட்களில் போரில் வெற்றி பெறவில்லை. திட்டமிடப்படாத ஊரடங்கு மில்லியன் கணக்கான உயிர்களை அழித்தது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

சனிக்கிழமை காலை 8 மணியளவில் கரோனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,00,04,599 ஆக உயர்ந்துள்ளதாகவும் இறப்பு எண்ணிக்கை 1,45,136-ஐ எட்டியுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் 347 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமையன்று ஒரு கோடியைத் தாண்டியுள்ள நிலையில், கிட்டத்தட்ட கடந்த ஒரு மாதத்தில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 95.50 லட்சமாக உயர்ந்துள்ளது.

நாட்டில் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5ஆம் தேதி 40 லட்சத்தையும் தாண்டியது.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

''மகாபாரதப் போர் 18 நாட்களில் வென்றது. கரோனா வைரஸுக்கு எதிரான போர் 21 நாட்கள் ஆகும் என்று மார்ச் மாதம் கூறிய பிரதமரின் கருத்துகளை யோசித்துப் பாருங்கள்.

கிட்டத்தட்ட 1.5 லட்சம் இறப்புகளுடன் 1 கோடி கோவிட் தொற்று! திட்டமிடப்படாத ஊரடங்கால் பிரதமர் கூறியது போல் ‘21 நாட்களில் போரில் வெற்றி பெற முடியவில்லை’. ஆனால், அது நிச்சயமாக நாட்டின் மில்லியன் கணக்கான உயிர்களை அழித்தது''.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in