Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

சீனாவுடன் ஒப்பந்தம் செய்த இலங்கையை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்- நேபாளத்துக்கு முப்படை தலைமை தளபதி அறிவுரை

இந்தியாவுடன் நேபாள அரசு சமீப காலமாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளையும் சேர்த்து புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில், ‘நேபாள் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் கோஆபரேஷன் அண்ட் எங்கேஜ்மென்ட்’ அமைப்பின் 2-வது ஆண்டு பேச்சுவார்த்தை நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில்,முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று கூறியதாவது:

இந்திய - நேபாள உறவு என்பது இமயமலையை விட உயர்ந்தது; இந்தியப் பெருங்கடலை விட ஆழமானது. இந்தியா தனது அண்டைநாட்டுடன் நல்லுறவு வைத்துக் கொள்ள நட்புக் கரம் நீட்டுகிறது. அதில் எந்த ஆபத்தும் இருப்பதில்லை. (சீனாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாகக் கூறுகிறார்.) ஆனால், இந்தப் பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் ஏதாவது ஒப்பந்தம் மேற்கொள்வதாக இருந்தால், நேபாளம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

நேபாளத்துக்கென தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கைகள் இருக்கலாம். ஆனால், மற்ற நாடுகளுடன் (சீனா) ஒப்பந்தம் மேற்கொள்ளும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட இலங்கையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள். இந்தியா - நேபாளம் இடையே வளர்ச்சி என்பது பிரிக்க முடியாத ஒன்று. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x