Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 70% இந்தியர்கள் விரும்பவில்லை: சமூக ஊடக தளம் நடத்திய ஆய்வில் தகவல்

கிட்டத்தட்ட 70 சதவீத இந்தியர்கள், கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற சமூக ஊடக தளம் இம்மாதம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கரோனா தடுப்பூசி தொடர்பாக ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற சமுதாய சமூக ஊடக தளம், நாடு முழுவதிலும் 242 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டது. கருத்து கூறியவர்களில் 66 சதவீதம்பேர் ஆண்கள், 34 சதவீதம் பேர் பெண்கள். முதல் ஆய்வு அக்டோர் 15 முதல் 20 வரையிலும் இரண்டாவது ஆய்வு டிசம்பர் 10 முதல் 15 வரையிலும் நடந்தது. இதில் முதல் ஆய்வில் 61 சதவீதம் பேரும் இரண்டாவது ஆய்வில் 69 சதவீதம் பேரும் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயக்கம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ நிறுவனர் சச்சின் தபாரியா கூறியதாவது:

தடுப்பூசியின் செயல்திறன் அளவு, பக்க விளைவுகள் குறித்துபோதிய தகவல்கள் இல்லாதது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களை இந்த நோய் தொற்றாது என்ற நம்பிக்கை ஆகியவையே மக்கள் தயக்கம் தெரிவிப்பதற்கு முக்கிய காரணங்கள். நவம்பர் மத்தியில் 50,000 ஆக இருந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை டிசம்பர் மத்தியில் 25,000 ஆக குறைந்ததும் மக்களுக்கு விருப்பம் இல்லாமல் போனதற்கு மற்றொரு காரணமாகும்.

மக்களிடையே சமூக ஊடகம் அதிகம் ஊடுருவியுள்ள நிலையில் தடுப்பூசி தொடர்பான பொய்த்தகவல்கள் பரவும் ஆபத்து உள்ளது. எனவே தடுப்பூசி பரிசோதனை முடிவுகள் பற்றி மக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ மற்றும்சரியான நேரத்தில் அளிக்கப்படும் தகவல்களால் மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இவ்வாறு சச்சின் தபாரியா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x