

பிஹார் பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தை நாசமாக்கி விடுவார் என்று மோடியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடியை லாலு பிரசாத் ட்விட்டரில் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். முக்கிய மாக பிரதமர் மோடியை வெளி நாடு வாழ் குஜராத்தி என்று கிண்டலாக கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளது: வெளிநாடு வாழ் குஜராத்தியைவிட நானும், நிதிஷ் குமாரும் பிஹாரை பற்றி நன்கு அறிவோம். பாஜகவினரிடம் மாநிலத்தை ஒப்படைத்தால் அவர்கள் மாநிலத்தை நாசம் செய்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
முன்னதாக பிஹாரில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, லாலுவை கடுமையாக குற்றம்சாட் டினார். அப்போது 15 ஆண்டுகளாக பிஹாரில் லாலு காட்டாட்சி நடத்தி வந்தார். ஒரு காலத்தில் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர் போன்ற மன்னர் களும், சாணக்கியர் போன்ற புத்திக்கூர்மை மிக்கவர்களும், புத்தர் போன்ற ஞானிகளும் தோன்றிய மண்ணை இப்போ தைய ஆட்சியாளர்கள் நாசமாக்கி விட்டார்கள். இதனை மாற்ற பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.