

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குஜராத் மாநிலம்பனஸ் கந்தா மாவட்டம் தீசா என்ற இடத்தில் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் மாநில பாஜக துணைத் தலைவர் கோர்தன் ஜடாபியா பேசியதாவது:
விவசாயிகளின் நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் சுதந்திரமாக தங்கள் விளைப்பொருட்களை விற்க வேளாண் சட்டம் வகை செய்கிறது.
இந்த சட்டங்கள் அமல்படுத்தப்படும் போது விளைப் பொருட்களை வாங்க விவசாயிகளின் வயல்களில் வர்த்தகர்களும் ஏற்றுமதியாளர்களும் வரிசையில் நிற்பார்கள். விவசாயிகள் கார் வாங்கிதங்கள் நிலங்களுக்கு காரில் போகலாம். அதற்கு புதிய வேளாண் சட்டம் உதவி செய்யும். நாடு 1947-ல்சுதந்திரம் அடைந்தாலும் 2020-ம்ஆண்டில்தான் விவசாயிகள் சுதந்திரம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு கோர்தன் ஜடாபியா பேசினார்.