கடலோர காவல் படையில் இணைந்தது ‘ஐசிஜிஎஸ் அன்மோல்’ ரோந்து கப்பல்

கடலோர காவல் படையில் இணைந்தது ‘ஐசிஜிஎஸ் அன்மோல்’ ரோந்து கப்பல்
Updated on
1 min read

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், விரைவு ரோந்து கப்பலான ‘ஐசிஜிஎஸ் அன்மோல்’ இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில ஆளுநர் கே.என்.திரிபாதி கூறும்போது, “சீனா உட்பட அண்டை நாடுகளின் போர் வியூகம் மேம்பாடு அடைந்து வரும் நிலையில், கடலோர காவல் படையின் பங்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது” என்றார்.

மேற்குவங்க மாநிலம் ஹல்தியாவை மையமாகக் கொண்டு இந்தக் கப்பல் பணியில் ஈடுபடும் என இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதற் காக, 20 அன்மோல் வகை கப்பல்களை வடிவமைத்து தயாரித்துக் கொடுக்கும் பணியில் கொச்சி ஷிப்யார்டு ஈடுபட்டுள்ளது. இதுவரை 12 கப்பல்கள் கட்டி முடிக்கப்பட்டு பணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 13-வது கப்பலாக இது பணியில் இணைக்கப்பட்டது.

50 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல், மணிக்கு 65 கி.மீ.க்கும் (35 நாட்ஸ்) கூடுதலாக பயணம் செய்யும் திறன் வாய்ந்தது. மேலும் 24 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து 2,775 கி.மீ. வரை பயணிக்கும்.

இந்த கப்பலில் அதிநவீன ஆயுதங்கள், நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் 40/60 போபர்ஸ் பீரங்கி உள்ளிட்ட வையும் இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in