Last Updated : 18 Dec, 2020 06:10 PM

 

Published : 18 Dec 2020 06:10 PM
Last Updated : 18 Dec 2020 06:10 PM

கோவிட் 19 முன்களப் பணியாளர்களுக்கு இடைக்கால ஓய்வளிக்க சில வழிமுறைகள் தேவைப்படலாம்: உச்ச நீதிமன்றம்

அயராது உழைக்கும் கோவிட் 19 முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு இடைக்கால ஓய்வளிக்க சில வழிமுறைகள் தேவைப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கோவிட் 19 வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் (SoPs) அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை உயர் நீதிமன்றம் இன்று நிறைவேற்றியது.

இதற்கான உத்தரவுகளை வெளியிட்ட நீதிபதிகள் ஆர்.எஸ்.ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோரைக் கொண்ட நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு கூறியதாவது:

வழிகாட்டுதல்களை சரியாக அமல்படுத்தாததாலும், அதைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறை இல்லாததாலும் கோவிட் -19 நோய்த்தொற்று நாட்டில் “காட்டுத் தீ” போல பரவியுள்ளது.

கோவிட் 19க்கு எதிரான "உலகப் போர் நடந்துகொண்டிருக்கிறது. இந்த முன்னோடியில்லாத நோய்த்தொற்றால் உலகில் எல்லோரும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட எந்தவொரு முடிவும் நீண்ட காலத்திற்கு முன்பே அறிவிக்கப்பட வேண்டும், இதனால் மக்கள் அறிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்.

கோவிட் 19 சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள சுகாதாரப் பணியாளர்கள் அயராது உழைத்து வருகிறார்கள். ஏற்கனவே எட்டு மாதங்களுக்கு மேலாக உழைத்துவரும அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்ந்து போயிருக்கிறார்கள். அவர்களுக்கு இடைவிடாத ஓய்வு அளிக்க சில இயக்க நடைமுறைகள் தேவைப்படலாம்.

இந்த தொற்று நேரத்தில் ஒவ்வொரு மாநிலமும் விழிப்புடன் செயல்பட வேண்டும் மற்றும் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும்.

இந்த முக்கியமான தருணத்தில் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்தான் முக்கியமானதாக இருக்கவேண்டும். வேறு எந்தக் கருத்தாய்வுகளையும் விட முதல் முன்னுரிமை இதற்காக வழங்கப்ட வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x