

கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் விரைவில் குணமடைந்து ஆரோக்கியத்துடன் திகழ பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி தெரிந்தவுடன் மக்ரோன் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். கரோனா உறுதிப்பட்டதைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மக்ரோன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
கோவிட்-19 தொற்று நீங்கி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் விரைவில் குணமடைந்து ஆரோக்கியத்துடன் திகழ பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"எனது அருமை நண்பர் இமானுவேல் மக்ரோன் விரைவில் குணமடைந்து, ஆரோக்கியத்துடன் திகழ வாழ்த்துகிறேன்," என்று ட்விட்டர் பதிவொன்றில் பிரதமர் கூறியுள்ளார்.