பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சி முறியடிப்பு: இரு பாக். தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

பஞ்சாப்பில் உள்ள சர்வதேச எல்லை | பிரதிநிதித்துவப் படம்.
பஞ்சாப்பில் உள்ள சர்வதேச எல்லை | பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகள் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லபபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலம் வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தீவிரவாதிகள் இருவர் பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய இத் தீவிரவாதிகள் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றனர்.

அப்போது அட்டாரி எல்லைப் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை சுட்டுக்கொன்றனர்.

துருப்புக்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டவுடன் கூடுதல் விவரங்கள் அறியப்படும், ஆனால் அடர்த்தியான மூடுபனி இப்பகுதியை சூழ்ந்துள்ளது.

இவ்வாறு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in