

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கப் பகுதியில்தான் கேரள வனத் துறையினர் வாகன நிறுத் தும் இடத்தைத் தேர்வு செய் துள்ளனர் என்ற வரை பட ஆதாரம் தமிழக அதி காரிகளுக்கு கிடைத்துள்ளது.
பெரியாறு புலிகள் சரணாலயத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணி களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு இடையூறுகள் ஏற் படுவதாகக் கூறி, கேரள அரசு வாகன நிறுத் தும் இடத்தை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன் கேரள வனத்துறை யினர் தேக்கடி ஆனவச்சால் அருகே உள்ள புல்தகிடி என்ற பகுதியை வாகன நிறுத்தும் இடமாகத் தேர்வு செய்து ஜேசிபி இயந்திரம் மூலம் தரையை சமப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், அந்த இடம் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு உள்பட்ட இடம் எனக் கூறி தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து, தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத் துக்குச் சென்று வாகன நிறுத்தும் இடம் தயார் செய்வதை தடுத்து நிறுத்த முயன் றனர். ஆனால், அந்த இடம் அணையின் நீர்பிடிப்பு பகுதி என்று சொல்வதற்கு ஆதாரம் உள்ளதா, அதனைத் தங்களிடம் காட்ட வேண்டும் எனக் கூறி கேரள வனத் துறையினர் தமிழக அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து அதிகாரிகள் சென்னை பொதுப்பணித் துறை உயர் அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து முல்லைப் பெரியாறு அணையின் வரைபடத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது அந்த வரைபடம் கிடைத்துள்ளது. அதில் கேரள வனத்துறையினர் வாகன நிறுத்த இடம் தேர்வு செய்திருந்த பகுதி அணை நீர்பிடிப்பு பகுதிக்குள்பட்டதுதான் எனத் தெளிவாகத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த வரைபடத்தின் நகலை புதன்கிழமை தமிழக அதிகாரிகள் கேரள தலைமைச் செயலருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதி வரைபடம்.