Published : 16 Dec 2020 02:44 PM
Last Updated : 16 Dec 2020 02:44 PM

கேரள உள்ளாட்சித் தேர்தல்; இடதுசாரிகள்- காங்கிரஸ் தலா 3 மாநகராட்சிகளை கைபற்ற வாய்ப்பு: திருவனந்தபுரத்தில் பாஜகவுக்கு 2-ம் இடம்

கேரள உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சிகளில் ஆளும் இடது முன்னணியும், காங்கிரஸ் கூட்டணியும் தலா 3 மாநகராட்சிகளை கைபற்றும் சூழல் உள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாஜக 2-ம் இடம் பிடித்துள்ளது.

கேரளாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களிலும், 10-ந் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 14-ந் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 8-ந் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும், 10-ந் தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதமும், 14-ந் தேதி நடந்த 3-வது கட்ட தேர்தலில் 76.4 சதவீத வாக்குகளும் பதிவாகின.

தபால் ஓட்டுகள் என்று சேர்த்து 3 கட்டமாக நடந்த தேர்தலில் மொத்தம் 78.64 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சிகள், நகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மாநகராட்சிகளில் இடது ஜனநாயக முன்னணி 3 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தற்போதைய முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

------

திருவனந்தபுரம் மாநகராட்சி

இடதுமுன்னணி - 53 வார்டுகள்

காங்கிரஸ் கூட்டணி- 8 வார்டு

பாஜக - 29 வார்டுகள்

------

கொல்லம் மாநகராட்சி

இடதுமுன்னணி - 39 வார்டுகள்

காங்கிரஸ் கூட்டணி- 9 வார்டு

பாஜக - 6 வார்டுகள்

-------

கொச்சி மாநகராட்சி

இடதுமுன்னணி - 29 வார்டுகள்

காங்கிரஸ் கூட்டணி- 31வார்டு

பாஜக - 5 வார்டுகள்
--------

திருச்சூர் மாநகராட்சி

இடதுமுன்னணி - 20 வார்டுகள்

காங்கிரஸ் கூட்டணி- 23வார்டு

பாஜக - 6 வார்டுகள்
-------

கோழிக்கோடு மாநகராட்சி

இடதுமுன்னணி - 43 வார்டுகள்

காங்கிரஸ் கூட்டணி- 143வார்டு

பாஜக - 9 வார்டுகள்
-------

கண்ணூர் மாநகராட்சி

இடதுமுன்னணி -13 வார்டுகள்

காங்கிரஸ் கூட்டணி- 33வார்டு

பாஜக - 9 வார்டுகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x