

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தனர்.
திரிகோனியா மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 32 பேர் நேற்று முன்தினம் இரவு, தங்கள் பகுதியில் துர்கை அம்மன் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பேலா என்ற கிராமத்துக்கு அருகே ஒரு பாலத்தை கடக்க முயன்றபோது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து டிராலியுடன் ஆழமான ஓடையில் விழுந்தது.
இதையடுத்து உள்ளூர் மக்கள் மேற்கொண்ட மீட்புப் பணியில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 5 குழந்தைகள் உட்பட 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில் 17 பேரை காண வில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் பிரீத்தி சுக்லா கூறும்போது, “மீட்புப் பணியில் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் துணை ராணுவப் படை யின் உதவி கோரப்பட்டுள்ளது” என்றார்.