ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது

ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நேற்று விவசாயி ஒருவரிடம் ரூ. 35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சி யரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

சித்தூர் மாவட்டம் பீலேரு அருகே உள்ள ஒரு கிராமத்தை விவசாயி ஒருவர், தனது நிலத்துக்கு பட்டா கோரி பீலேரு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். பாஸ் புத்தகம் வழங்க வட்டாட்சியர் சுரேந்திர பாபு ரூ. 35 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாக, விவசாயி திருப்பதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தார். அதன் பேரில், நேற்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பீலேரு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மறைந்திருந்தனர். அப்போது, விவசாயியிடம் இருந்து ரூ. 35 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, வட்டாட்சியர் சுரேந்திரபாபுவை கையும் களவுமாக கைது செய்தனர்.

பட்டா பெறுவது எப்படி?

நிலம் வாங்கும் ஒவ்வொருவரும் அதற்காக அரசு தரும் பட்டாவை பெறுவது அவசியம். ஆனால், பெரும்பாலும் பொதுமக்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால், தற்போது தமிழகத்தில் ஆவண முறைகேடுகளை களைய, நில விற்பனையி்ன் போது சார்பதிவாளர் அலுவலகங்களில் பட்டா கோரப்படுகிறது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,‘‘ நிலத்தை வாங்குபவர், கிரையப் பத்திரம், மூலப்பத்திரம், வில்லங்க சான்றிதழ் ஆகியவற்றுடன் வட்டாட்சியருக்கு பட்டா கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நிரந்தர நில பதிவேட்டில், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, கள ஆய்வும் நடத்தப்பட்டு நிலம் தற்போது யாருடைய கட்டுப்பாட் டில் இருக்கிறது என்பது ஆய்வு செய் யப்பட்டு பட்டா வழங்கப்படுகிறது.

இது தவிர, ஆன்லைன் மூலம் விரைவு பட்டா பெறும் தி்ட்டமும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதிலும்,ஆவணங்கள், கள ஆய்வு முடித்து, உட்பிரிவு அல்லாத நிலங்களுக்கு 15 நாட் களிலும், உட்பிரிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு 30 நாட்களிலும் பட்டா வழங்கப்படுகிறது.

ஆனால், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நில அளவை அலுவலர்கள் (சர்வேயர்கள்) பற்றாக்குறை, வில்லங்க சொத்து இவற்றால் குறித்த காலத்தில் பட்டா கிடைக்காமல் போகிறது’' என்றார்.

பட்டாவுக்கு விண்ணப்பித்து அரசு நிர்ணயித்த காலத்தில் கிடைக்கா விட்டால், சென்னையில் மாவட்ட வருவாய் அதிகாரி (டிஆர்ஓ), இதர மாவட்டங்களில் வருவாய் கோட்ட அலுவலரிடம் (ஆர்டிஓ) மேல் முறையீடு செய்யலாம்.

இவர்களை அடுத்து, மாவட்ட ஆட்சி யரிடமும் முறையீடு செய்யலாம்.

கையூட்டு உள்ளிட்ட பிரச்சினை களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங் களில், அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தொடர்பு எண்கள் பொதுமக்கள் பார்வைக்கு தகவல் பலகையில் அளிக்கப்பட்டிருக்கும் அவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னையில் 044-24615929,24615949, 2461 5989 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களில் புகார் அளிக்கலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in