பிரதமர் நரேந்திர மோடி- ஷேக் ஹசினா இடையே உச்சி மாநாடு

பிரதமர் நரேந்திர மோடி- ஷேக் ஹசினா இடையே உச்சி மாநாடு
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான மெய்நிகர் உச்சி மாநாடு இம்மாதம் 17-ந் தேதி அன்று (17.12.2020) நடைபெற உள்ளது.

இருதரப்பு உறவுகள், குறிப்பாக கோவிட்டுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்க உள்ளனர்.

இந்தியாவும், வங்கதேசமும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன. 2019 அக்டோபரில், பிரதமர் ஷேக் ஹசினா அலுவலகப் பயணமாக இந்தியா வந்தார்.

2020 மார்ச்சில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முஜிப் பார்ஷோ–வின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி செய்தி ஒன்றை அனுப்பினார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் இரண்டு தலைவர்களும் தொடர்ந்து, தொடர்பில் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in