விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு
Updated on
1 min read

டெல்லியில் எப்ஐசிசிஐ சார்பில் நேற்று நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி யதாவது:

வேளாண் துறை என்பது மற்றஎல்லாத் துறைகளுக்கும் தாய் போன்றது. இந்தத் துறைக்கு எதிராக பிற்போக்கான நடவடிக்கைகளை அரசு எடுக்காது. அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் கேள்விக்கே இடமில்லை. இந்திய விவசாயிகளின் நலன்களை மனதில் கொண்டுதான் சமீபத்தில் வேளாண் துறையில்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன.

விவசாய சகோதரர்களின் கருத்துகளை கேட்பதற்கு அரசுஎப்போதும் ஆர்வமாக உள்ளது.விவசாயத் துறை பற்றிய தவறான கருத்துகளை போக்க விவசாயிகளுடன் அரசு எப்போதும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. அவர்களுக்கு உத்தரவாதம்அளிப்பதற்கும் விவாதிப்பதற் கும் பேச்சுவார்த்தை நடத்தவும் அரசு எப்போதும் திறந்த மனதுடன் உள்ளது. கரோனா காலத்தில் விவசாயத் துறை மட்டுமே பாதகமான விளைவுகளை வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in