

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்பதை உறுதி செய்ய புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த 1991 நவம்பர் 22-ம் தேதி மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ததோபாண்ட், சுதேசி ஜக்ரன் மஞ்ச் அமைப்பை தொடங்கினார். இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை பிரிவாகச் செயல்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளை வரையறுப்பதில் சுதேசி ஜக்ரன் மஞ்ச் முக்கிய பங்காற்றி வருகிறது. திட்ட கமிஷனுக்கு மாற்றாக நிதிஆயோக் அமைப்பை உருவாக்கியது உட்பட மத்திய அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளின் பின்னணியில் சுதேசி ஜக்ரன் மஞ்ச் உள்ளது. இந்த அமைப்பின் ஆண்டு மாநாடு காணொலி வாயிலாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் போராட் டம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து சுதேசி ஜக்ரன் மஞ்ச் அமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் மகாஜன் கூறியதாவது:
விவசாயிகளின் நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. எனினும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக விவசாயிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியமா கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் விவசாயிகளின் நலன் சார்ந்தது மட்டுமல்ல. இது நாட்டின்உணவு பாதுகாப்பு சார்ந்தது. இந்த திட்டம் அமலில் இருந்தால் மட் டுமே விவசாயிகள் அதிக அளவில் வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்வார்கள்.
எனவே குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்பதை உறுதி செய்ய புதிய வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டும். இல்லையெனில் புதி தாக சட்டம் இயற்ற வேண்டும்.
வேளாண் சந்தைகளை தாண்டி, வெளிச் சந்தைகளிலும் வேளாண் விளை பொருட்களைவிற்க வழிவகை செய்யப்பட் டுள்ளது. அத்தகைய சந்தைகளில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குகுறைவாக வேளாண் விளை பொருட்களை வாங்கினால் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்.
விவசாயிகள் நீதிமன்றம்
விவசாயிகள் தொடர்பான வழக்குகளை மாஜிஸ்திரேட் நீதி மன்றங்களில் விசாரிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் ஏற்கெனவே ஏராளமான வழக்கு கள் நிலுவையில் உள்ளன. எனவே நுகர்வோர் நீதிமன்றங்களை போலபுதிதாக விவசாயிகள் நீதிமன்றங் களை உருவாக்க வேண்டும்.
புதிய சட்டங்களின்படி நிறுவ னங்களும் விவசாயிகளாக கருதப்பட வாய்ப்புள்ளது. இது பொருத்தமாக இருக்காது. நிறுவனங்களுக்கு, விவசாயிகள் அந்தஸ்துவழங்கக்கூடாது.இந்த அம்சங்களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக வேளாண் விளை பொருட்களை வாங்கினால் சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்.