Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

கரோனா வைரஸ் தடுப்பூசி விநியோக வழிகாட்டு நெறிகள்: மத்திய அரசு வெளியீடு

கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த ஆண்டுதொடக்கத்தில் கரோனா தடுப்பூசிகிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளி யிட்டிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே கரோனா தடுப்பூசி போடப் படும். தடுப்பூசி விநியோகம் தொடர்பாக கோ-வின் (Co-WIN) என்ற இணையதளம் அல்லது செயலி உருவாக்கப்படும். இதில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டோ ருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வாக்காளர் பட்டியலின் மூலம் 50 வயதுக்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்படுவார்கள். முன்பதிவின்போது வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர்உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

முன்பதிவுக்கு பிறகு எந்த மையம், எந்த தேதியில், எந்த நேரத்துக்கு வர வேண்டும் என்ற விவரம் அனுப்பி வைக்கப்படும். ஐந்து பேர் அடங்கிய குழுவினர், கரோனா தடுப்பூசிகளை போடுவார்கள்.

ஒரு மையத்தில் காத்திருக்கும் அறை, தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறை ஆகிய 3 அறைகள் அமைக்கப்படும். ஒரு மையத்தில் நாளொன்றுக்கு 100 முதல் 200 பேருக்கு கரோனா தடு்பபூசி போடப்படும். ஒருவருக்கு தடுப்பூசி போட்ட பிறகு அவரது உடல்நிலை 30 நிமிடங்கள் கண்காணிக்கப்படும். ஒரு மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் தடுப்பூசிகள் மட்டுமே விநியோகம் செய்யப் படும்.

இவ்வாறு மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.

முதல்கட்ட கரோனா தடுப்பூசி விநியோகத்தில் சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தடுப்பூசியில் கரோனா முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x