கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்ய காங். முடிவு: முதல்வர் சித்தராமையாவுக்கு சிக்கல்

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்ய காங். முடிவு: முதல்வர் சித்தராமையாவுக்கு சிக்கல்
Updated on
2 min read

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு கர்நாட காவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், சித்தராமையா தலை மையில் ஆட்சி அமைத்தது. அப்போது சித்தராமையா மூத்த காங்கிரஸ் தலைவர்களை புறக் கணித்துவிட்டு, தனது ஆதர வாளர்களுக்கு மட்டுமே அமைச் சரவையில் இடமளித்ததாக புகார் எழுந்தது. இதனால் மூத்த காங்கிரஸ் தலைவர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, மல்லிகார்ஜுன கார்கே, தரம்சிங், பரமேஷ்வர் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந் தனர். மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவ்வப்போது சந்தித்து, சித்தராமையாவின் செயல் பாடுகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் டெல்லி சென்ற எஸ்.எம்.கிருஷ்ணா சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார். அப்போது சித்தராமையாவின் ஆட்சியால் காங்கிரஸுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.கர்நாடக‌ அமைச்சர்கள் மக்கள் நலத்திட்டங்களில் அக்கறை காட்டாமல் இருப்பதால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகியது.

இதையடுத்து சோனியா காந்தி கர்நாடக மாநில காங்கிரஸ் தலை வர் ஜி.பரமேஷ்வரை அழைத்து நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். சித்தராமையா அரசின் குறைபாடுகள், கர்நாடக அமைச்சரவையின் செயல்பாடு, மக்கள் நலத்திட்டங்களில் நிலவும் முறைகேடு ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் நிர்வாக வசதிக்காக துணை முதல்வர் பதவியையும் வழங்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி காங்கிரஸ் மூத்த தலை வர்களான மல்லிகார்ஜுன கார்கே, திக்விஜய் சிங் ஆகியோரிடம் கர்நாடக மாநில அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார். அப்போது முதல்வர் மாற்றம், துணை முதல்வர் பதவி உருவாக்கம் ஆகியவை குறித்து விரிவாக ஆராயப்ப‌ட்டது. மேலும் அடுத்த மாத இறுதிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் அவசியம் என முடிவெடுக்கப்பட் டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள‌து.

இது தொடர்பான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதற்காக சோனியா காந்தி, சித்தராமையா, ஜி.பரமேஸ்வர் ஆகியோரை மீண்டும் டெல்லிக்கு அழைத் துள்ளார். அதனால் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என்பதால் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல்வேறு அரசியல் திட்டங்களை தீட்டியுள்ளனர்.

இது தொடர்பாக ஜி. பரமேஷ்வர் கூறுகையில், '' காங்கிரஸ் மேலி டத்தின் முடிவுபடி, இம்முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அப்போது எனக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து மேலிடம் தான் முடிவு செய்யும். இத்தகைய விவகாரங்களில் நான் தலையிட விரும்பவில்லை. காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முதல்வர் சித்தராமையாவுடன் க‌லந்து ஆலோசித்த பிறகு அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவோரின் பட்டியல் வெளியிடப்படும்''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in