பாஜக தேசிய செயலாளருக்கு குண்டு துளைக்காத கார்:  உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா | கோப்புப் படம்.
பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா | கோப்புப் படம்.
Updated on
1 min read

மேற்கு வங்கததில் ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டதை அடுத்து பாஜக தேசிய செயலாளர் விஜயவர்கியாவுக்கு குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம், டிசம்பர் 10 அன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு நேற்று வந்தார். கொல்கத்தாவிலிருந்து டைமண்ட் ஹார்பர் தொகுதிக்குச் சென்றபோது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நட்டாவின் பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், பாஜக தேசிய செயலாளர் விஜயவர்கியா, துணைத் தலைவர் முகுல் ராய் உள்ளிட்ட சிலரும் தாக்குதலில் காயமடைந்ததாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க ஆளுநர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அம்மாநில தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிஆகியோர் நேரில் ஆஜராகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் ஆஜராக தேவையில்லை எனமேற்கு வங்க அரசு தெரிவித்துவிட்டது.

இதனை அடுத்து மத்திய மேற்கு வங்கத்தில் பணிபுரியும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டனர்.

இச்சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்னர், பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

தெற்கு 24 பர்கானாஸில் உள்ள மதுராபூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க திங்கள்கிழமை பிற்பகல் பாஜக தேசிய செயலாளர் விஜயவர்கியா நகரத்திற்கு வருகை தந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய்வர்கியா கூறுகையில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, எனக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in