Last Updated : 20 Oct, 2015 08:30 AM

 

Published : 20 Oct 2015 08:30 AM
Last Updated : 20 Oct 2015 08:30 AM

குட்கா பயன்படுத்துவோர் எண்ணிக்கை மத்திய அரசு தடையால் குறைந்தது

கடந்த 2011-ம் ஆண்டு குட்காவுக்கு மத்திய அரசு தடை விதித்தற்குப் பிறகு, அதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. உலக சுகாதார மையத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கணக் கெடுப்பில் இது தெரியவந் துள்ளது.

இந்தியாவில் 2011, ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு குட்கா தடை செய்யப்பட்டது. இதன் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஜான் ஹாப் கின்ஸ் பல்கலைக்கழம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. டாக்டர் கிருஷ்ணாத் ரே தலைமையிலான குழுவினர், உலக சுகாதார மையம் (இந்தியப்பிரிவு) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் இந்திய மாற்று மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர்.

டெல்லி, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், குஜராத், அசாம், ஒடிஸா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

குட்கா பயன்படுத்துவதை நிறத்தியவர்களில் சராசரியாக 66 சதவீதம்பேர், குட்கா தடை செய்யப்பட்டதால் அப்பழக்கத்தைக் கைவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த எட்டு மாநிலங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் குட்கா மீதான தடையை 92 சதவீதம்பேர் வரவேற்றுள்ளனர்.

குட்காவை விட முடியாதவர் கள், அதன் மூலப்பொருட்களை தனித்தனியாக வாங்கி, கலந்து பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் தடையை வரவேற்றுள்ளதுடன், பழக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

சில தனியார் நிறுவனங்கள், புகையிலை, உணவுப் பொருள் என தனித்தனி பாக்கெட்களில் விற்பனை செய்து வருகின்றன. இவ்விரண்டையும் வாங்குபவர் கள் அவற்றைச் சேர்த்து குட்காவாக பயன்படுத்தி வருகின்றனர் என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார மைய தகவலின்படி, புகை இல்லாத புகையிலை உண்பவர்களில் ஐந்தில் 2 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

குட்காவை விட முடியாதவர்கள், அதன் மூலப்பொருட்களை தனித்தனியாக வாங்கி, கலந்து பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் தடையை வரவேற்றுள்ளதுடன், பழக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x