

ஒன்றுபட்டு இருக்கும் இந்தியாவை பிளவுப்படுத்துவதற்கு தான், 'மோடி’ மாதிரியாக இருப்பார் என்றும் கூறும் வகையில், மோடியின் பெயருக்கு புதிய அர்த்தத்தை காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான கபில் சிபல் கண்டுபிடித்துள்ளார் (Modi - Model of Dividing India).
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை(A B C D- ஆதர்ஷ் ஊழல், போபர்ஸ், கோல்( நிலக்கரி சுரங்க) முறைகேடு, மாப்பிள்ளை-Damad) என்றும் (R- ராகுல், S- சோனியா, V- வதேரா, P- பிரியங்கா) என்றும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கபில் சிபல், 'மோடி’ மாதிரி என்பதனை விவரித்து அர்த்தம் கூறும் வகையில் ஒரு அர்த்தத்தை கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் மோடிக்கு, எவ்வாறு பேச வேண்டும் என்று கூட தெரியவில்லை, நகராட்சி கவுன்சிலர்கள் கூட அவரைவிட நல்ல முறையில் பேசுவார்கள். 'மோடி’ மாதிரி என்று நாடு முழுவதும் கூறி வருவது வேறு ஒன்றும் இல்லை, அவை (Modi - Model of Dividing India) என்பது தான் அது.
பாஜக பிரதமர் வேட்பாளர், வாக்குகளை பெற இனவாதத்தை பயன்படுத்தி வருகிறார்” என்று கூறினார்.