Last Updated : 12 Dec, 2020 04:30 PM

 

Published : 12 Dec 2020 04:30 PM
Last Updated : 12 Dec 2020 04:30 PM

மரங்கள் வெட்டுவதைத் தடுக்க மோடி உருவத்தை வரையும் ஒடிசா கலைஞர்

வனத்தில் மரங்கள் வெட்டுவதைத் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரங்களில் மோடி உருவத்தை ஒடிசா கலைஞர் ஒருவர் வரைந்து வருவது பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கலைஞர் சமரேந்திர பெஹெரா. இவர் தனது சித்திரங்கள் மூலம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவைச் சேர்ந்த மரங்களில் அண்மைக் காலத்தில் இவர் வரைந்த ஓவியங்கள் ஒடிசா மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சிமிலிபால் வனத்திற்குள்ளும் வெளியேயும் உள்ள மரங்களில் இவர் பல்வேறு சித்திரங்களை வரைந்துள்ளார்.

இதுகுறித்து பெஹெரா ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

''இந்த உருவப்படத்தின் மூலம் இந்த வனத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைக் கவனத்தில் கொள்ளுமாறு மோடிஜிக்கு ஒரு கோரிக்கையை அனுப்ப விரும்புகிறேன்.

நான் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கலைஞன். எனது மேன்மைமிக்க பிரதமரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாது என்பதை நான் அறிவேன்.

நாட்டின் சுகாதார மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

அதனால்தான் நான் அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வனத்தில் உள்ள மரத்தில் அவரது உருவத்தை வரைகிறேன். அத்துடன் நமது சூழலைக் காப்பாற்ற, சட்டவிரோதமாக மரங்களை வெட்ட வேண்டாம் என்ற ஒரு விழிப்புணர்வுச் செய்தியையும் அனுப்ப முயல்கிறேன்''.

இவ்வாறு சமரேந்திர பெஹெரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x