Last Updated : 12 Dec, 2020 11:48 AM

 

Published : 12 Dec 2020 11:48 AM
Last Updated : 12 Dec 2020 11:48 AM

உ.பி.யில் மத விவகாரங்களுக்காகத் தனி இயக்குநரகம்: யோகி ஆதித்யநாத் அரசு அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தில் மத விவகாரங்களுக்காகத் தனி இயக்குநரகம் அமைக்கப்படுவதாக யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசின் அதிகாரபூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''உ.பி.யில் மத விவகாரங்களுக்காகத் தனி இயக்குநரகம் அமைக்கப்படுகிறது. மாநிலத்தில் மத நடவடிக்கைகள் எந்தவிதத் தொய்வும் இன்றி தொடர்ந்து சீராக நடைபெறுவதற்காக மத விவகாரங்கள் துறை (தர்மர்த் காரியா விபாக்) அமைக்கப்படுகிறது.

வாரணாசி மாவட்டம் காசி விஸ்வநாத் சிறப்புப் பகுதி மேம்பாட்டு கவுன்சில் வழங்கிய கட்டிடத்தில் இயக்குநரகத்தின் தலைமையகம் அமைக்கப்படும். மற்றொரு துணை அலுவலகம் காசியாபாத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் பவனில் அமைக்கப்படும்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில், மத இடங்களுக்குச் சிறப்பு அங்கீகாரம் வழங்குவதோடு, பக்தர்களுக்கு வசதியையும் வழங்குவதில் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. காசி, அயோத்தி, மதுரா-பிருந்தாவன், விந்தியவாசினி தாம் உள்ளிட்ட புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான வசதிகளை விரிவுபடுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபோல பல்வேறு மத விவகார நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவும், சீராக நடைபெறவும் மதவிவகாரங்கள் துறை செயல்படும்''.

இவ்வாறு மாநில அரசின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x