

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த லூலூ குழுமம், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நகரில் உணவு பதப்படுத்தும் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை லூலூ குழுமத்தின் தலைவர் யூசுப் அலி வெளியிட்டார்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உணவு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள காஷ்மீர் முதன்மைச் செயலர் நவீன் குமார் சவுத்ரி தலைமையிலான குழுவிடம் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
காஷ்மீரில் இருந்து ஆப்பிள், குங்குமப்பூ உள்ளிட்டவற்றை லூலூ குழுமம் இறக்குமதி செய்கிறது. இவற்றை அடுத்து வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். லூலூ குழுமம் இதுவரையில் 400 டன் ஆப்பிளை இறக்குமதி செய்துள்ளது. கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே இறக்குமதி தொடர்ந்தது.