கேரள சட்டப்பேரவைத் தலைவரின் காலில் ஓட்டுநர் செருப்பு அணிவித்து விட்டதால் சர்ச்சை: உடல்நிலை சரியில்லை என விளக்கம்

கேரள சட்டப்பேரவைத் தலைவரின் காலில் ஓட்டுநர் செருப்பு அணிவித்து விட்டதால் சர்ச்சை: உடல்நிலை சரியில்லை என விளக்கம்
Updated on
1 min read

இயற்கை விவசாயத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் கேரள பேரவை வளாகத்தில் அறுவடைத் திருநாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, கேரள சட்டப்பேரவை தலைவர் சக்தனுக்கு அவரது ஓட்டுநர் கீழே அமர்ந்து செருப்பை அணிவித்து விட்டார். இப்புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக செய்தியாளர் கள் சந்திப்பில் சக்தன் கூறியதாவது:

நோய்வாய்ப்பட்டுள்ள என்னால் அதிகம் குனிய முடியாது. இதுபோன்ற சூழலில் செருப்பை அணிவதற்கு ஒருவரின் உதவியை எதிர்பார்ப்பது பெரும் தவறுதான்.

கண்ணில் ஏற்படும் அரிதான நோயால் கடந்த 19 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என்னைக் குனியக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள் ளனர். எனது செருப்பைக் கழற்று மாறு என் ஓட்டுநரும், உறவினரு மான பிஜுவிடம் (ஓட்டுநர்) நான் கூறவில்லை. கடந்த 17 ஆண்டு களாக என்னுடன் இருக்கும் அவருக்கு எனது நோய் பற்றித் தெரியும். எனவே, அவராகத்தான் செருப்பை அணிவதற்கு உதவி செய்தார். நான் மாநிலத்தில் எங்கு சென்றாலும் எனது தனிப்பட்ட உதவிக்காக எப்போதுமே என்னுடன் பயணம் செய்வார்.

இந்த சிறிய விஷயம் இவ்வளவு பெரிய சர்ச்சைக்குரியதாகி இருப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான மூத்த காங்கிரஸ் தலைவர்களுக் கும், எதிர்க்கட்சியான எல்டிஎஃப் தலைவர்களுக்கும் எனக்கு இருக் கும் நோயைப் பற்றித் தெரியும்.

இதனிடையே, கேரள சட்டப் பேரவை உறுப்பினர்கள் தலைமைச் செயலக சங்கத்தினர் (கேஎல்எஸ்ஏ) இவ்விஷயம் சர்ச்சையாக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவித் துள்ளனர்.

இதுதொடர்பாக சங்க பொதுச் செயலாளர் எஸ். ஜெயக்குமார் கூறும்போது, “பேரவைப் பணி யாளர்கள் விவகாரத்தில் சாக்தன் எப்போதும் சாதகமான அணுகு முறையையே பின்பற்றுவார். இவ்வளாகத்தில் ஏராளமான மேம்பாட்டுப் பணிகளை அவர் செய்துள்ளார்” என்றார்.

இதுதொடர்பாக கருத்து தெரி வித்துள்ள ஓட்டுநர் பிஜு, “நானா கத்தான் இதனைச் செய்தேன். இதில் எவ்வித புகாரும் இல்லை. அவர் சிரமப்படுவதைப் பார்த்தேன். எனவே ஓடிச் சென்று உதவி செய்தேன். ஆனால், வேண்டாம், வேண்டாம் எனத் தடுத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம். சுதீரன் கூறும் போது, “பேரவைத் தலைவர் தனது உடல்நிலை பாதிப்பைத் தெரிவித்து விட்டார். இவ்விளக்கத்தை நாம் ஏற்கத்தான் வேண்டும். இதனை மேலும் சர்ச்சையாக்கத் தேவையில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in