

இந்தியாவின் உடற்யிற்சி இயக்கத்துக்கு சர்வதேச சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்கள் அனைவருக்கும் விடுத்த அழைப்பு, சர்வதேச சுகாதார நிறுவனத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது.
"ஃபிட்னஸ் கா டோஸ், ஆதா கன்டா ரோஜ் (தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்) என்னும் பிரச்சாரத்தின் மூலம் உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் இந்தியாவின் முன்னெடுப்பை உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகிறது," என்று அந்த அமைப்பு டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.
ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 1 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவால் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்தி திரைப்படத் துறையினர், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், உடல்நல ஊக்கமளிப்பவர்கள் உள்ளிட்டோர் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேட்மின்டன் உலக சாம்பியன் பி வி சிந்து, எழுத்தாளர் சேத்தன் பகத், வாழ்க்கை முறை மற்றும் உடல் நல நிபுணர் லியூக் கொட்டின்ஹோ, துப்பாக்கி சுடுதலில் உலக கோப்பையை வென்ற அபூர்வி சந்தேலா உள்ளிட்ட பலரும் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.