இந்தியாவின் கோவிட் பரிசோதனை 15 கோடியை கடந்தது: 10 நாளில் 1 கோடி பேருக்கு பரிசோதனை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா மற்றொரு சாதனை படைத்துள்ளது. கரோனா பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 15 கோடியைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,22,959 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 15,07,59,726-ஆக உயர்ந்துள்ளது.

கடைசி ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விரிவான பரிசோதனை காரணமாக, கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

மற்றொரு சாதனையாக, கடந்த 11 நாட்களாக, தினசரி கொவிட் பாதிப்பு எண்ணிக்கை 40,000க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31,521 பேர் மட்டுமே கோவிட் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அதே நேரத்தில் 37,725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாட்டில் 3,72,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.81 சதவீதம்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 92.5 லட்சத்தைக் (92,53,306) கடந்து விட்டது. குணமடைந்தோர் வீதம் 94.74 சதவீதமாக உள்ளது. குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து தற்போது 8,881,013-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 412 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக 500-க்கு கீழ் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in