Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 03:15 AM

ட்விட்டரில் அதிகமாக பேசப்பட்டோர் பிரதமர் மோடிக்கு 7-வது இடம்

வாஷிங்டன்

நடப்பாண்டில் ட்விட்டர் வலைதளத்தில் எந்த நபரை அதிகமாக மக்கள் தேடி இருக்கிறார்கள்; யார் குறித்து அதிகளவில் பேசப்பட்டிருக்கிறது; எந்தெந்த ‘ஹேஷ்டேக்’குகள் வைரலாகின என்பது தொடர்பாக ‘ட்ரேசி மெக்ரா’ என்ற ட்விட்டர் ஆய்வு நிறுவனம் பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, உலகளவில் ட்விட்டரில் அதிக மக்களால் பேசப்பட்டோரின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதலிடத்தில் இருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 7-வது இடத்தில் இருக்கிறார்,

அதிகளவில் டிரெண்டாகிய ‘ஹேஷ்டேக்’குகள் பட்டியலில் ‘கோவிட் –19’ முதலிடத்தில் உள்ளது. அதேபோல, ‘ஸ்டே ஹோம்’ என்ற ஹேஷ்டேக் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

அமெரிக்காவில் போலீஸாரின் அடக்குமுறையில் உயிரிழந்த கருப்பினத்தைச் சேர்ந்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவருக்கு ஆதரவாக ஒலித்த ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற ‘ஹேஷ்டேக்’ உலகளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x