

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் கொல்லப் பட்டனர்.
சிறை வளாகம் 1-ல் உள்ள கைதிகள் ஈஸ்வர், விஜய், ஷதாப் ஆகியோர் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் அவர்களது அறைகளுக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்கள் மீது அனில், வாசு, சந்தீப் ஆகிய கைதிகள் தாக்கினர்.
இதையடுத்து கடும் மோதல் ஏற்பட்டது. இதில் அனில் என்பவர் பலத்த காயம் அடைந்தார். காவலர்கள் அவரை மீட்டு தீன தயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.படுகாயமடைந்த மற்றொரு கைதி ஈஸ்வருக்கும் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரும் உயிர் பிழைக்கவில்லை.