Last Updated : 25 Oct, 2015 02:17 PM

 

Published : 25 Oct 2015 02:17 PM
Last Updated : 25 Oct 2015 02:17 PM

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் அழகு: வானொலி உரையில் மோடி

இந்திய நாட்டின் அழகே அதன் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தன்மையில்தான் உள்ளது என்று வானொலி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை எனும் மந்திரத்தை சிந்தனையிலும், வெளிப்பாட்டிலும் கொண்டு சென்று முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார் மோடி.

35 நிமிட வானொலி உரையில் மோடி பேசியதாவது:

ஒருமைப்பாடு என்பதே நமது சிந்தனையின், நடத்தையின், வெளிப்பாட்டின் ஊடகமாக இருக்க வேண்டும். இந்தியா என்பது வேற்றுமைகளால் நிரம்பியது. இதில் பலதரப்பட்ட பிரிவினர்கள், பலதரப்பட்ட மதத்தினர், பல்வேறு மொழிகள், பல்வேறு சாதிகள் என்று பன்முகத்தன்மையுடன் விளங்குகிறது. இப்படி ஏகப்பட்ட வேற்றுமைகள் நாட்டில் உள்ளது, இந்த வேற்றுமைகளே நாட்டின் அழகு.

இந்திய நாட்டுடன் பல்வேறு விதங்களில் ஒற்றுமை கொண்டுள்ள ஆப்பிரிக்காவில் திறன் வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கு வகித்துள்ளது. இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் ஆழமான உறவுகள் உள்ளன. நம்மைப் போலவே மக்கள் தொகை, உலக மக்கள்தொகையில் இருதரப்பும் மூன்றில் ஒரு பங்கை நிரப்புகிற்து.

கெசட்டட் அல்லாத குரூப் டி, சி மற்றும் பி, பிரிவு பணியிடங்களுக்கு 2016 முதல் நேர்காணல்கள் இல்லை. இதற்கான நடைமுறைகள் முடிந்து விட்டன.

நிதிநிலை அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட விஷயங்கள் விரைவில் அமல் படுத்தப்படும்

பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை தங்கமாக வைத்துக் கொள்ளலாம். தங்கப் பத்திரங்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும். இனி வங்கிகளில் உங்கள் தங்கத்துக்கு பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு.

உடல் உறுப்புதானம் மிக முக்கியமான ஒரு சேவையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கண்கள் தேவைப்படுகிறது. மாணவர்கள் உடல் உறுப்பு தானங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது அவசியம்.

இதற்காக தேசிய உதவி எண்ணும் நடைமுறையில் உள்ளது. தினமும் பல விபத்துகள் நடப்பதால், மக்களுக்கு ஆங்காங்கே உடல் உறுப்புகள் தேவைப்பட்ட வண்னம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பாக லிவர் மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்பு தானம் நாட்டுக்கு மிக அவசியமானது.

இவ்வாறு பேசினார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x