

காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் கத்ரா நகரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலில், நவராத்திரி பண்டிகை காலத்தில் 2.5 லட்சத்துக் கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர்.
இதுகுறித்து வைஷ்ணவ தேவி கோயில் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை காலத்தில் மொத்தம் 2,58,946 பக்தர்கள் வழிபாடு செய்தனர். 9-வது தினத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் வழிபட்டனர்” என்றார்
நவராத்திரி விழா செம்மையா கவும் அமைதியாகவும் நடைபெற தேவையான ஏற்பாடுகளை, சுற்றுலாத் துறை மற்றும் கோயில் வாரியத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.