

கரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் கடத்தப்பட்ட 1,600 குழந்தைகள், நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வரும் அரசுசாரா அமைப்பு (என்ஜிஓ) மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி பச்பன் பச்சாவோ அந்தோலன் (பிபிஓ) என்ற என்ஜிஓவை நடத்தி வருகிறார். 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற சத்யார்த்தி, குழந்தைகளின் உரிமைகளுக்காக பாடுபட்டு வருகிறார். இந்நிலையில், கரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் கடத்தப்பட்ட 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கைலாஷின் என்ஜிஓ மீட்டுள்ளது.
இதுகுறித்து பிபிஓ செயல் இயக்குநர் தனஞ்செய் டிங்கல் கூறும்போது, “கரோனா பெருந்தொற்று காலத்தில் பல குடும்பங்களில் பொருளாதாரப் பிரச்சினை இருந்தது. வேலை இல்லாததால் வறுமையால் வாடியவர்கள் தாங்கள் வாங்கிய கடனுக்காக தங்களது குழந்தைகளை கொத்தடிமைகளாக கொடுக்கும் நிலைஏற்பட்டது. மேலும் சிலர்குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை பெற்றுத் தருகிறோம் என்று கூறி கடத்துகின்றனர்.
குழந்தைகளைக் கடத்துவதாக வந்த தகவலைக் கொண்டு கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 80 வாகனங்களை போலீஸார் துணை கொண்டு சோதனையிட்டோம். இதில் 1,675 குழந்தைகளை மீட்டுள்ளோம்.
இதில் ஒரு சிறுவன் கிருஷ்ணா பிஹாரைச் சேர்ந்தவன். பெற்றோ ருக்கு ரூ.20 ஆயிரம் கடன் கொடுத்துவிட்டு கிருஷ்ணாவை குஜராத்
துக்கு வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். காந்தி நகரிலுள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அவனிடம் தினமும்சுமார் 12 மணி நேரம் வேலைவாங்கியுள்ளனர். கடந்த ஜூலை மாதம் கிருஷ்ணாவை மீட்டுபெற்றோரிடம் ஒப்படைத்தோம். இதுபோல பலரை மீட்டுள்ளோம்.
குழந்தைகளைக் கடத்துதல் அதிகமாகி வரும் சூழ்நிலையில் இதுதொடர்பான கண்காணிப்பும், விழிப்புணர்வும் நம்மிடையே தேவை. மேலும் கொத்தடிமை முறையை தடுக்கவும், அதை அடியோடு ஒழிக்கவும் நடவடிக்கை தேவை” என்றார்.