ஜிடிபி அடுத்த நிதி ஆண்டில் பழைய நிலைக்கு திரும்பும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து

ஜிடிபி அடுத்த நிதி ஆண்டில் பழைய நிலைக்கு திரும்பும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து
Updated on
1 min read

‘‘இந்தியப் பொருளாதார வளர்ச்சி 2021-22 நிதி ஆண்டில் கரோனாவுக்கு முன்பிருந்த நிலையை எட்டும்’’ என்று நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பெரும் சரிவைச் சந்தித்தது. இந்தச் சரிவில் இருந்து தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் முழுமையாக மீண்டு கரோனாவுக்கு முன்பிருந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் ஒரு நிதி ஆண்டு ஆகும் என நிதி ஆயோக் கூறியுள்ளது.

நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறுகையில், ‘‘நடப்பு நிதி ஆண்டில் இந்திய ஜிடிபி வீழ்ச்சியானது மைனஸ் 8 சதவிதத்துக்கும் குறைவாகவே இருக்கும். ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டுக்கான ஜிடிபி கணிப்பை மைனஸ் 9.5 சதவீதம் என்பதில் இருந்து மைனஸ் 7.5 சதவீதமாகக் கணித்துள்ளது. பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதன் அறிகுறியாகவே இது இருக்கிறது. அடுத்த நிதி ஆண்டில் மீண்டும் பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்பும் என்பதை உறுதியாக நம்பலாம்’’ என்றார்.

மேலும் அரசு நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in