Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM

புதிய வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு- காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி விவசாய சங்கங்கள் சார்பில் நாளை நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 9-ம் தேதி குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளன.

மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி பஞ் சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகை யிட்டு 11-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடும் எட்டப்படவில்லை.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடர வும் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்யவும் மத்திய அரசு முன்வந்த போதிலும் வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும்வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பல்வேறு கட்சிகள் ஆதரவு

ஏற்கெனவே அறிவித்தபடி விவசாய சங்கங்கள் சார்பில் நாளை நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இந்த முழுஅடைப்புக்கு காங் கிரஸ், சிரோமணி அகாலிதளம், தேசியவாத காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ் டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் நேற்று கடிதம் வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், "புதிய வேளாண் சட்டங் களால் இந்தியாவின் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வேளாண் துறை அழியும். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வேளாண் சந்தையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத் தும். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் சம்யுத் கிஷன் மோர்ச்சா நிர்வாகிகள் நேற்று கூறும்போது, "டிசம்பர் 8-ம் தேதி டெல்லி முழுமையாக சீல் வைக்கப் படும். மாலை 3 மணி வரை அனைத்து வகையான போக்குவரத்தையும் அனுமதிக்கமாட் டோம். அத்தியாவசிய தேவைகளை மட்டுமே அனுமதிப்போம். எங்களது போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு அளிக்கின்றன" என்று தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு

இதனிடையே விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வரும் 9-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா உள்ளிட்டோர் குடியரசு தலைவரை சந்திக்க உள்ளனர். சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து முழுஅடைப்புக்கு ஆதரவு கோரினர்.

முழு அடைப்பு போராட்டத்தால் டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு வரும் 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதுதொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இணை அமைச்சர்கள் கைலாஷ் சவுத்ரி, புருஷோத்தம் ரூபலாவுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதன்பின் வேளாண் இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறும்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்தி வருவதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x