

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் ஆயத்தப் பணிகளை நடைபெற்று வரும் நிலையில், நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கை பாஜக மூத்த தலைவர்கள் பலர் இன்று சந்தித்தனர்.
மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா, பாஜக பொதுச் செயலாளர் ஜெ.பி.நட்டா ஆகியோர் குஜராத் பவனில் மோடியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு, உமா பாரதி ஆகியோரும் மோடியை சந்தித்தனர்.
இதேபோல், டெல்லி அசோகா சாலையில் இருக்கும் ராஜ்நாத் சிங்கின் வீட்டிற்கும் பாஜக முக்கிய தலைவர்கள் பலர் படையெடுத்தனர். மேனகா காந்தி, உதித் ராஜ், விஜய் கோயல் ஆகியோர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.