திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: 9 நாட்களில் பக்தர்கள் ரூ.16 கோடி காணிக்கை

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: 9 நாட்களில் பக்தர்கள் ரூ.16 கோடி காணிக்கை
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா அக்டோபர் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 6,41,831 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த மாதம் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் 5,75,741 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைவிட பக்தர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் 25,73,717 லட்டு பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 17,78,841 பேருக்கு இலவச அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழா நடந்த 9 நாட்களில் உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ. 16.28 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in