

கிறிஸ்துமஸ் பண்டிகையன்று தேவாலயத்துக்கு அசாம் இந்துக்கள் சென்று வழிபட்டால் கடும் விலை கொடுக்க நேரிடும் என்று இந்துவலது சாரி அமைப்பான பஜ்ரங் தளம் அசாம் இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசாம் மாநிலம், சாச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பஜ்ரங் தளம் அமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் மிதுநாத் பேசிய இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
குறிப்பிடத்தக்கது.இந்த வீடியோ குறித்து ஆங்கில செய்திசேனல்கள் வெளியிட்ட செய்தி வெளியிட்டுள்ளன.
சில்சார் நகரில் நடந்த நிகழ்ச்சியில் விஸ்வ இந்து பரிசத் தலைவர் மிதுநாத் பேசுகையில் “ கிறிஸ்தவர்கள் பெரும்பகுதி வசிக்கும் மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் இருந்த விவேகானந்தா மையத்தை மூடிவிட்டனர். ஆதலால், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று அசாமில் உள்ள இந்துக்கள் யாரும் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தக் கூடாது அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.
அதையும் மீறி அசாமில் உள்ள இந்துக்கள் தேவாலாயத்துக்குச் சென்று வழிபட்டால் உரிய விலைகொடுக்க நேரிடும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைகக்கு எந்த இந்துக்களும் தேவாலாயத்துக்குச் செல்லக்கூடாது என்பதை உறுதி செய்வோம்.
டிசம்பர் 2-ம் தேதி நாங்கள் செய்த செயல் குறித்து நாளேடுகளில் என்ன மாதிரியான செய்திகள் டிசம்பர் 26-ம் தேதி வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. பஜ்ரங் தளம் அமைப்பினர் சில இடங்களை தாக்கிவிட்டார்கள், சிலரைத் தாக்கினார்கள் என்று செய்தி வந்தாலும் கவலையில்லை.
ஷில்லாங்கில் இந்துக் கோயில்கள் கதவை மூடினார்கள். ஆதலால், எங்களைப் பொருத்தவரை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று இந்துக்கள் தேவாலாயங்களுக்குச் செல்லக்கூடாது” எனத் தெரிவித்தார்.
விஹெச்பி தலைவர் மிதுநாத் பேசிய வீடியோ குறித்து சாச்சார் மாவட்ட காவல் துணை ஆணையர் கீர்த்தி ஜலீலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ இந்த வீடியோ குறித்து தாமாக முன்வந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.