

கொல்கத்தா மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் விதமாக, வரும் திங்கட்கிழமை (2020 டிசம்பர் 7) முதல் கூடுதல் சேவைகளை வழங்கவும், சேவை நேரத்தை நீட்டிக்கவும் கொல்கத்தா மெட்ரோ முடிவெடுத்துள்ளது.
தற்போது தினசரி 190 ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை (2020 டிசம்பர் 7) முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 204 ரயில் சேவைகளை கொல்கத்த மெட்ரோ இயக்கவுள்ளது.
மேலும், காலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 மணி வரை தற்போது சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்.
சேவைகளை நீட்டிக்க முடிவெடுத்திருப்பதற்காக கொல்கத்தா மெட்ரோவை மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியுஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.