Published : 26 May 2014 09:00 AM
Last Updated : 26 May 2014 09:00 AM

16-வது மக்களவையில் 61 பெண்கள்: பொதுத்தேர்தல் வரலாற்றில் அதிகம்

மக்களவைத் தேர்தலில் மொத்தம் 61 பெண் எம்.பி.க்கள் வெற்றி பெற் றுள்ளனர். இதுவரை நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இதுதான் அதிகம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பான மசோதா மாநிலங் கள வையில் நிறைவேறிய போதி லும், சில கட்சிகளின் எதிர்ப்பு காரண மாக மக்களவையில் நிறை வேற்றப் படாமல் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவை அடிப்படையாகக் கொண்டு பிஆர்எஸ் ஆய்வு நிறு வனம் சில தகவல்களை தொகுத்து வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவைக்கு நடை பெற்ற தேர்தலில் 11 சதவீத பெண்கள் மட்டுமே (61) வெற்றி பெற்றுள்ளனர். எனினும், மக்க ளவை வரலாற்றில் அதிக பெண் கள் இடம்பெறுவது இதுவே முதன் முறை. இது கடந்த 2009 தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களைவிட (58) சற்று அதிகம்.

கடந்த மக்களவையில் பட்டப் படிப்பு முடித்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 79 சதவீதமாக இருந்தது.

இது இப்போது 75 சத வீதமாகக் குறைந்துள்ளது. இது போல் 10-ம் வகுப்பு கூட படிக்காத எம்.பி.க்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த மக்களவையில் 3 சதவீதமாக இருந்தது. புதிய எம்.பி.க்களில் 71 பேர் (13%) மட்டுமே 40 வயதுக்குட்பட்டவர்கள். 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் 253 பேர். அதிக பட்சமாக 27 சதவீத எம்.பி.க்கள் வேளாண்மைதான் தங்கள் முதன்மை தொழில் என தங்களது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் மற்றும் சமூக சேவைதான் தங்கள் பணி என 24 சதவீதம் பேரும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக 20 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

15-வது மக்களவையில் இடம்பெற்றிருந்தவர்களில் 28 சத வீதம் பேர் அரசியல் மற்றும் சமூக சேவையிலும், 27 சதவீதம் பேர் வேளாண்மையிலும் 15 சதவீ தம் பேர் வர்த்தகத்திலும் ஈடுபட் டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x