Published : 05 Dec 2020 03:15 AM
Last Updated : 05 Dec 2020 03:15 AM

இந்திய பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்சிஎல் தலைவர் ரோஷ்ணி நாடார் முதலிடம்: 2-ம் இடத்தில் கிரண் மஜும்தார், 3-ம் இடத்தில் லீனா காந்தி திவாரி

மும்பை

இந்திய பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்சிஎல் டெக்னால ஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா முதலிடத்தில் உள்ளார்.

கோடக் வெல்த் ஹுருன் நிறுவனம் இந்தியாவில் உள்ளபணக்கார பெண்களை பட்டியலிட்டுள்ளது. சமீப காலங்களில் பெண்களும் மிக அதிக அளவில் சொத்து சேர்ப்பவர்களாக இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதில் பெண்களின் பங்
களிப்பும் கணிசமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் கோடக் வெல்த் ஹுருன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
செப்டம்பர் 2020 நிலவரப்படி குடும்ப தொழிலில் பெண்கள் எந்த அளவுக்கு பங்களிப்பு அளித்து தொழில் துறையில் சிறந்து விளங்குகின்றனர் என்பதையும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2,725 கோடியாக உள்ளது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களில் 38 பேரின் சொத்து மதிப்பு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. முதல் 10 இடங்களில் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு விவரம் வருமாறு:

ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா ரூ.54,850 கோடியுடன் முதலிடத்திலும் பயோகான் கிரண் மஜும்தார் ரூ.36,600 கோடியுடன் 2-ம் இடத்திலும் யுஎஸ்வி நிறுவன லீனா காந்தி திவாரி ரூ.21,340 கோடியுடன் 3-ம் இடத்திலும் உள்ளனர். டிவி லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் நிலிமா மொடபார்தி (ரூ.18,620கோடி), ஸோஹோ நிறுவனத்தின் ராதா வேம்பு (ரூ.11,590கோடி), அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தின் ஜெய உள்ளால் (ரூ.10,220 கோடி), ஹீரோ பின்கார்ப் நிறுவனத்தின் ரேணு முன்ஜால் (ரூ.8,690 கோடி), அலெம்பிக் நிறுவனத்தின் மல்
லிகா சரயு அமின் (ரூ.7,570 கோடி), தெர்மாக்ஸ் நிறுவனத்தின் அனு ஆகா மற்றும் மெஹர் பதம்ஜி (ரூ.5,850 கோடி), பல்குனி நாயர் மற்றும்குடும்பத்தினர் (ரூ.5,410 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.ரோஷ்ணி நாடார்கிரண் மஜும்தார்லீனா காந்தி திவாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x