மக்கள் விரும்பினால் அரசியலில் குதிப்போம்: புதிய அமைப்பு தொடங்கி ஹர்திக் படேல் பேச்சு

மக்கள் விரும்பினால் அரசியலில் குதிப்போம்: புதிய அமைப்பு தொடங்கி ஹர்திக் படேல் பேச்சு
Updated on
1 min read

மக்கள் விரும்பினால் அரசியலில் ஈடுபடுவதாக படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

பாரதிய படேல் நவநிர்மாண் சேனா என்ற புதிய அமைப்பை தொடங்கி இருக்கும் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

படிதர் அனமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவரான ஹர்திக் படேல், குஜராத்தில் படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழுவை ஒருங்கிணைத்து பலரால் பேசப்பட்டார்.

தற்போது அகில பாரதிய படேல் நவநிர்மாண் சேனா என்ற புதிய அமைப்பை டெல்லியில் தொடங்கினார். அப்போது அவர் கூறும்போது, "மக்கள் விரும்பினால் அரசியலில் ஈடுபடுவது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். நான் மட்டுமே இதுகுறித்து முடிவு எடுக்க முடியாது. இந்த அமைப்பில் உள்ள அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம். அதுபோன்ற முடிவு எடுக்க சில காலம் ஆகும்.

இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் இருக்க வேண்டும். பொருளாதார அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடு." என்று தெரிவித்தார்.

மேலும், குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி பிஏஏஎஸ் அமைப்பு போராடும். ஆனால் நாடு முழுவதும் உள்ள குர்மிகள், மராத்தியர்கள், படேல்கள் மற்றும் குஜ்ஜார்கள் உள்ளிட்ட 27 கோடி மக்களை ஒன்றிணைப்பதற்காக ஏபிபிஎன்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in